Connect with us

India

சித்ராவுடன் டேட்டிங் சென்று நடிகர் ரக்‌ஷன் வீடியோ எடுத்து மிரட்டியதாக வெளியான தகவல்! அது குறித்து முதல்முறையாக அவரின் விளக்கம்

சித்ராவுடன் பிரபல நடிகர் ரக்‌ஷன் டேட்டிங் சென்ற போது வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டினார் என தோழிகள் கூறிய நிலையில் அது தொடர்பில் ரக்‌ஷன் விளக்கமளித்துள்ளார்.

சித்ரா மரணமடைந்து ஒரு வாரத்தை கடந்த நிலையில் அது தொடர்பில் புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அவர் தற்கொலை தொடர்பில் பொலிசார் கணவர் ஹேமந்தை கைது செய்துள்ளனர்.

 

இதனிடையில் சித்ராவுடன் நடிகர் ரக்‌ஷன் ஒருமுறை டேட்டிங் சென்ற போது இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை அவர் ஹேமந்திடம் காட்டுவதாக கூறி மிரட்டினார் என சித்ரா தோழிகள் கூறியிருந்தனர்.

மேலும் ரக்‌ஷன் தமிழக அமைச்சர் ஒருவரின் மகனான பிரவீன் என்பவரின் நெருங்கிய நண்பர் எனவும் தகவல் வெளியானது.

இது குறித்து விளக்கமளித்துள்ள ரக்‌ஷன், சித்ராவின் கணவர் ஹேமந்த் ஒரு ஏமாற்று பேர்வழி என எங்கள் துறையில் பேசி கொள்வார்கள்.

நான் சித்ராவுடன் டேட்டிங் சென்றதாகவும், அவரை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் வரும் செய்திகள் உண்மையானதல்ல.

நான் இன்னும் சொற்ப தொகையை சம்பளமாக வாங்கி கொண்டு ஒரு கூலி தொழிலாளியாகவே வாழ்க்கையை நடத்தி வருகிறேன்.

சித்ரா எனக்கு நல்ல தோழி அவ்வளவு தான், அவர் மரணத்துக்கு நானும் சென்றிருந்தேன்.

அங்கு எல்லாரும் ஹேமந்தை தான் குறை சொல்லி பேசி கொண்டிருந்தார்கள். இதை தவிர எனக்கும் சித்ரா மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending